சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

🕔 February 9, 2016

Sisiliya - 012செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை, இம்மாதம் 23 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

இதேவேளை, விளக்க மறியலில் உள்ள நிலையில்  சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிக்சை பெற்றுவரும் அவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் இதன்போது நீதவான் பணிப்புரை வழங்கினார்.

மேலும், பொருத்தமான வாட் ஒன்றில் சிசிலி கொத்தலாவலவை அனுமதிக்குமாறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு இதன்போது நீதமன்றம் உத்திரவிட்டது.

சிசிலி கொத்தலாவலவுக்கு எதிராக 09 வழக்குகளில் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி:துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்