மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில்

மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில் 0

🕔29.Oct 2015

மஹிந்த ராஜபக்சவினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய, நாதகல தோட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர்

மேலும்...
சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர் 0

🕔29.Oct 2015

– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த அமைச்சினை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டதாக, கிழக்கு மாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை உடனடியாகப் பொறுப்பேற்றுகுமாறு, மு.கா. தலைவர்

மேலும்...
அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு

அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு 0

🕔29.Oct 2015

ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பிரதியமைச்சர் அமீரலி திறந்து வைத்த பின்னர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வருகை தந்து, அதே கட்டிடத்தினை திறந்து வைத்த விநோத சம்பவம் நேற்று புதன்கிழமை நிகழ்ந்தது. மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தில், விஞ்ஞான கூடமொன்று மத்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔28.Oct 2015

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய குழுவின் முதலாவது சந்திப்பு, இன்று புதன்கிழமை உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளுராட்சி எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக,

மேலும்...
நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு

நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2015

– அஹமட் – ‘முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டார்’ என்று, ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென்று, செய்தியோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏ.எல்.ஏ. பத்தாஹ் தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனையை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது’ எனும் தலைப்பில், இன்று புதன்கிழமை ஊடகங்களில் செய்தியொன்று

மேலும்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஜவாத், மு.கா. தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஜவாத், மு.கா. தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔28.Oct 2015

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத் என்று அறியப்படும் கே.எம்.ஏ. அப்துல் ரஸ்ஸாக், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் இந் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்

மேலும்...
மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் 0

🕔28.Oct 2015

– க. கிஷாந்தன் –மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு,  இன்று புதன்கிழமை திறக்கப்பட்டது.நுவரெலியா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை காலை முதல் பெய்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தது.இதனால் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 9.30 மணிவரை, நீர்த் தேகக்த்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதனைதொடர்ந்து இன்று புதன்கிழமை காலை, மற்றுமொரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால்,

மேலும்...
வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்

வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார் 0

🕔28.Oct 2015

– அபு அலா – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான, சகல முன்னெடுப்புக்களையும் மிக அவசரமாக மேற்கொள்ளும்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் விடுத்த பணிப்புரையை அடுத்து, வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையால்

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம் 0

🕔28.Oct 2015

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2015

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; இலத்திரனியல் அடையாள அட்டையினை நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கான

மேலும்...
பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல்

பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல் 0

🕔27.Oct 2015

– க. கிஷாந்தன் – தனது தாயின் சகோதரியுடைய கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை, அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹட்டன் வெலிஓயா மேல்பிரிவைச்

மேலும்...
‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை

‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை 0

🕔27.Oct 2015

‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா’ நிகழ்வில், மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய தொடக்கவுரையின் போது, வாசித்த கவிதை  இடம்: சென்னை, தேனாம்பேட்டை – காமராசர் அரங்கம்காலம்: 26.10.2015அருளும் அன்பும்அளவற்றருளும்  அவனின்;கருணை மழையில் நனைந்து ,உருளும் உலகைஇருளும் ஒளியுமாய்அமைத்த அவனைப் புகழ்ந்து,பொருளும், அறிவும்பொதிந்த குர்ஆன் கொணர்ந்தநபியை நினைந்து,அருள்வாய் கவிதைநிறைவாய்  என்றுஅல்லாஹ் கருணை இறைஞ்சி,கவித்தேன் பருககாத்திருக்கும்

மேலும்...
போலி நாணயம் உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை

போலி நாணயம் உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –கண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை, நேற்று திங்கட்கிழமை கண்டி பொலிஸார் முற்றுகையிட்டனர்.சட்டவிரோதமான அச்சிடப்பட்ட 06 போலி இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களும், ஆயிரம் ரூபா நோட்டுக்கள் 19 மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சட்டவிரோத நிலையத்தில் போலி பண நோட்டுக்கள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் மட்டுமன்றி

மேலும்...
வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு 0

🕔27.Oct 2015

வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில்

மேலும்...
தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –தனது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே, குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்