மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
– க. கிஷாந்தன் –
மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு, இன்று புதன்கிழமை திறக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை காலை முதல் பெய்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தது.
இதனால் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 9.30 மணிவரை, நீர்த் தேகக்த்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டன.
இதனைதொடர்ந்து இன்று புதன்கிழமை காலை, மற்றுமொரு வான்கதவு திறக்கப்பட்டது.
இதனால், அதனை அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.