வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

🕔 October 27, 2015

SLMC - 01டக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றவுள்ளனர்.

அந்தவகையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ‘வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான அர்த்தபுஷ்டியுடனான நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்’ என்ற தலைப்பிலும்,மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ‘அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் பற்றிய அரச கொள்கையும் அதன் பிரதிபலனும்’ என்ற தலைப்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘நல்லிணக்கம்: வடபுல முஸ்லிம்களின் மீள் வருகை மற்றும் மீள்குடியேற்றம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வை’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இந் நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும் கலந்து கொள்ளவுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கருத்தரங்களில் துறைசார் நிபுணர்களும், வளவாளர்களும் ஆய்வுரைகள் நிகழ்த்துவதோடு, பரஸ்பரம் கருத்தப்பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன.

Comments