நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
இலத்திரனியல் அடையாள அட்டையினை நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை, இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
“ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, அனைத்து தகவல்களும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையில் உள்ளடக்கப்படும். அத்துடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும்.
16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.