உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

🕔 October 28, 2015

Faizer musthafa - 011ள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய குழுவின் முதலாவது சந்திப்பு, இன்று புதன்கிழமை உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அண்மையில் ஐவர் அடங்கிய குழுவொன்றினை அமைச்சர் பைசர் முஸ்தபா நியமித்தார்.

காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் அசோக பீரிஸ் தலைமையில், அனைத்து கட்சிகளில் பிரதிநிதிகள் அடங்கிய ஐவர் அடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எம். மிஸ்வார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதில் திருத்தம் செய்தல் குறித்து, மேற்படி குழுவானது மூன்று மாதங்களுக்குள் அமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்