வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்

🕔 October 28, 2015

Naseer - 02
– அபு அலா –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான, சகல முன்னெடுப்புக்களையும் மிக அவசரமாக மேற்கொள்ளும்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் விடுத்த பணிப்புரையை அடுத்து, வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையால் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குப்பட்ட  பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

இதனையடுத்தே, மேற்படி பணிப்புரையை விடுத்ததோடு, வடிகான்களை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளையும் அமைச்சர் நசீர் இன்று புதன்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

மாரி காலத்துக்கு முன்னதாக, வடிகான்களைத் துப்புரவு செய்யுமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சர், சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தபோதும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அந்தப் பணிகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Naseer - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்