பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல்

🕔 October 27, 2015

Hatton police - 09
– க. கிஷாந்தன் –

னது தாயின் சகோதரியுடைய கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை, அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹட்டன் வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த மேற்படி யுவதியை, ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போதே, ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ, மேற்படி உத்தரவினை வழங்கினார்.

தொடர்பான செய்தி: தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்