Back to homepage

மேல் மாகாணம்

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை 0

🕔17.Aug 2017

அமைச்சர் தயாகமகேவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலதிக அமைச்சுப் பதவியொன்றினை ஜனாதிபதி வழங்குவதற்கு திட்டமிட்டிருந்த போதும், இறுதிக் கட்டத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. வெளி விவகார அமைச்சராக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திலக் மாரப்பன நியமிக்கப்பட்டிருந்தார். அதன்போது, கிழக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பினை தயா கமகேவுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். ஆயினும், பிரதமர்

மேலும்...
விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு 0

🕔17.Aug 2017

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்றது. இதன்போது, தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடந்த ஆட்சியில்

மேலும்...
சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம் 0

🕔16.Aug 2017

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த சிராந்தி ராஜபக்ஷ; ஒரு கட்டத்தில் தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று கூறியிருந்தமையானது, தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின்னர் வாக்கு

மேலும்...
கடன் சுமையிலிருந்து விடுவிக்க, அமைச்சர் றிசாட் இணைக்கம்

கடன் சுமையிலிருந்து விடுவிக்க, அமைச்சர் றிசாட் இணைக்கம் 0

🕔16.Aug 2017

– சுஐப். எம். காசிம் – விதை உருளைக்கிழங்கை 23வருடங்களுக்கு முன்னர் கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73 பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில், அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று, பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். ஊவா மாகாணத்தைச்

மேலும்...
கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔16.Aug 2017

– ஆர். ஹஸன் –கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றினை அமைக்கும் பொருட்டு, மைத்திரி மற்றும் மஹிந்த அணிகள் இரண்டும் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

மேலும்...
மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔16.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியதாகத் தெரியவருகிறது. கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டதாக, பல அமைச்சர்கள் இதன்போது குற்றம்

மேலும்...
சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு

சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு 0

🕔16.Aug 2017

சிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் பெற்ற போது, அவரின் அருகில் தானும் சட்டத்தரணிகளும் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அனுமதி கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கில், சிரந்தி ராஜபக்ஷவின் அரச சார்பற்ற நிறுவனத்துக்குரிய டிபென்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலமொன்றினை

மேலும்...
சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு 0

🕔15.Aug 2017

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் சீனிக்கு தற்போதை இறக்குமதி வரி 10 ரூபாவாகும். தற்போதைய அறிவிப்பின்படி இந்தத் தொகை 18 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. உள்நாட்டு கரும்பு தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு,

மேலும்...
சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்

சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Aug 2017

குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகிய சிராந்தி ராஜபக்ஷவிடம் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிராந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு பிரிவினுள் இருந்த போது, அவருக்கு ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, விசாரணை முடிந்து  அவர் வெளியேறும் வரை காத்திருந்தனர். இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சிராந்தி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பாதுகாப்புடன் அனுப்பி

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி 0

🕔15.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக, இன்று செவ்வாய்கிழமை இரவு 08.30  மணி தொடக்கம் பதில் வழங்கவுள்ளார். இதில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு,  அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தமது

மேலும்...
கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர் 0

🕔15.Aug 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம் 0

🕔15.Aug 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். வெளி விவகார அமைச்சினை

மேலும்...
மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு 0

🕔15.Aug 2017

– க. கிஷாந்தன் –டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான எம். ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை

மேலும்...
தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு 0

🕔15.Aug 2017

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்படி

மேலும்...
ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம் 0

🕔15.Aug 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்