சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்

🕔 August 15, 2017

குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகிய சிராந்தி ராஜபக்ஷவிடம் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிராந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு பிரிவினுள் இருந்த போது, அவருக்கு ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, விசாரணை முடிந்து  அவர் வெளியேறும் வரை காத்திருந்தனர்.

இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சிராந்தி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய அமைப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய டிபென்டர் வாகனம் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அது குறித்த விசாரணைகளுக்காகவே ஷிரந்தி ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்