கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

🕔 August 15, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார்.

றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த டிபென்டர் வாகனம் 2011ஆம் ஆண்டு, செஞ்சிலுவைச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் சிராந்தியின் புதல்வர்களில் ஒருவரான ரோஹித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜராகியிருந்தார்.

சுப்ரீம்சற் எனப்படும் செயற்கைக் கோளினை 2012ஆம் ஆண்டு சீனாவில் ஏவியமை தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காகவே, ரோஹித ராஜபக்ஷ அழைக்கப்பட்டிந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்