சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு

🕔 August 16, 2017

சிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் பெற்ற போது, அவரின் அருகில் தானும் சட்டத்தரணிகளும் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அனுமதி கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கில், சிரந்தி ராஜபக்ஷவின் அரச சார்பற்ற நிறுவனத்துக்குரிய டிபென்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலமொன்றினை பெறும் பொருட்டு, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி ராஜபக்ஷ நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிராந்தியிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, தானும் சட்டத்தரணிகளும் அருகில் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அனுமதி கோரியுள்ளார். எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

தேவை ஏற்படின் குற்ற விசாரணை பிரிவின் வேறு ஒரு இடத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும், விசாரணை மேற்கொள்ளும் இடத்தில் அனுமதிக்க முடியாதெனவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதற்கமைய வேறொரு இடத்தில் மஹிந்த நின்று கொண்டிருக்க, சிராந்தி ராஜபக்ஷ மாத்திரம் வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் பல மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்