வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

🕔 August 15, 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளி விவகார அமைச்சினை பொறுப்பேற்பதில் திலக் மாரப்பன தயக்கம் காட்டியதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, சட்ட மா அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்