சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

🕔 August 15, 2017

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் சீனிக்கு தற்போதை இறக்குமதி வரி 10 ரூபாவாகும். தற்போதைய அறிவிப்பின்படி இந்தத் தொகை 18 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு கரும்பு தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வரி அதிகரிப்பு காரணமாக, சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்