Back to homepage

மேல் மாகாணம்

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை 0

🕔20.Dec 2020

கொரோனாவினல் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்க மறுக்கும் முடிவை மாற்றுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். அவரின் ‘யுடியுப்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களும் தனக்கு கிடைக்கும் வரை, தான்

மேலும்...
கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம் 0

🕔20.Dec 2020

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...
200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர்

200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர் 0

🕔20.Dec 2020

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப்

மேலும்...
கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔20.Dec 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப்

மேலும்...
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய 0

🕔19.Dec 2020

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை

மேலும்...
கொரோனா: மேலும் 05 பேர் மரணம்

கொரோனா: மேலும் 05 பேர் மரணம் 0

🕔18.Dec 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 35,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. உலகளவில் 07 கோடியே 38 லட்சத்து 95,957 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16

மேலும்...
லஞ்சக் குற்றச்சாட்டு: ஒரே நிறுவனத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

லஞ்சக் குற்றச்சாட்டு: ஒரே நிறுவனத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம் 0

🕔18.Dec 2020

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமை புரியும் 600 உத்தியோகஸ்தர்கள் உடன டியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைப் பரிசீலித்த பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தான் உட்பட கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி சேவையில் இணைந்து கொண்டவர்கள் மாத்திரம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான  செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் 0

🕔18.Dec 2020

கடந்த நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்துவற்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதியை விடவும் குறைவான தொகையே செலவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக நேற்று வியாழக்கிழமை ஒன்றுகூடிய போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 7000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும், 4566 மில்லியன்

மேலும்...
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Dec 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது 0

🕔17.Dec 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன. இலங்கை தர நிர்ணய சபை – இந்த டின் மீன்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்கள் அடைக்கப்பட்ட டின்களுக்குள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற ‘ஆர்சனிக்’ ரசாயனம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு திருப்பி

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி 0

🕔17.Dec 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔17.Dec 2020

தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் தனது திட்டங்களில் சேர்க்கத் தவறியுள்ளதால், பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் 0

🕔17.Dec 2020

எம்.சி.சி. எனப்படும் அமெரிக்காவின் ‘மிலேனியம் சேலேன்ஜ் கோப்பரேசன்’ ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டிலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கைக்கு இதன் மூலம் கிடைக்கவிருந்த 480 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 8407 கோடி ரூபாய்) நிதி இல்லாமல் போயுள்ளது. எம்.சி.சி நிர்வாகம் டிசம்பர் 15ஆம் திகதி தமது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும்...
இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு 0

🕔16.Dec 2020

புதிய பறவை இனமொன்றினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று இலங்கையில் கண்டுபிடித்துள்ளது. ‘ஹனுமான் ப்ளோவர்’ என இந்தப் பறவையினம் பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கடற்கரை பறவையானது ‘சரத்ரியஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்’ எனும் பறவை இனத்தின் உப இனமாகும். இப் பறவை இனமாது இலங்கையின் கடற்கரைப் பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களுக்கும், மன்னார் தொடக்கம் கோணேஸ்வரம், இந்தியா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்