கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

🕔 December 20, 2020

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன்களை நிறுவுவதற்கு கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உல்களை மற்றைய உடல்களுடன் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்பதால், இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் வரை, சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைத்திருப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக, இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமையினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்