ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

🕔 December 18, 2020

டந்த நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்துவற்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதியை விடவும் குறைவான தொகையே செலவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக நேற்று வியாழக்கிழமை ஒன்றுகூடிய போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 7000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும், 4566 மில்லியன் ரூபாவே செலவானதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை முறையாக நிர்வகித்தமையினால், தேர்தலை நடத்துவதற்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments