இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு

🕔 December 16, 2020

புதிய பறவை இனமொன்றினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று இலங்கையில் கண்டுபிடித்துள்ளது.

‘ஹனுமான் ப்ளோவர்’ என இந்தப் பறவையினம் பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்கரை பறவையானது ‘சரத்ரியஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்’ எனும் பறவை இனத்தின் உப இனமாகும்.

இப் பறவை இனமாது இலங்கையின் கடற்கரைப் பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களுக்கும், மன்னார் தொடக்கம் கோணேஸ்வரம், இந்தியா வரையிலான நிலைப்பகுதிகளுக்கும் உரியதாகும்.

இந்தப் பறவைகள் குடியேறுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரநிலங்கள் முக்கியமாகும் என, கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மரபணு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தி, இந்த பறவை இனமானது ஒரு உப இனம் என, ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வெள்ளை நிறத்தையுடைய இந்த பறவை – சிட்டுக்குருவியின் பருமனைக் கொண்டதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்