‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

🕔 December 17, 2020

ம்.சி.சி. எனப்படும் அமெரிக்காவின் ‘மிலேனியம் சேலேன்ஜ் கோப்பரேசன்’ ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டிலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

அதனால் இலங்கைக்கு இதன் மூலம் கிடைக்கவிருந்த 480 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 8407 கோடி ரூபாய்) நிதி இல்லாமல் போயுள்ளது.

எம்.சி.சி நிர்வாகம் டிசம்பர் 15ஆம் திகதி தமது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, எம்.சி.சி.க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இருந்தபோதும் தற்போதைய அரசாங்கம் – எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை என தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments