தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 December 18, 2020

டை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் ஹிட்லர் மற்றும் நாஜி படைகளை புகழ்ந்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பேசினால், சிறை தண்டனை அனுபவிக்க நேரும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லாததன் காரணமாக, இனவாத குழுவினர், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களைப் புகழ்ந்து பேசுவதன் ஊடாக தேவையற்ற நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்