Back to homepage

பிரதான செய்திகள்

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு 0

🕔8.Feb 2016

– க. கிஷாந்தன் – இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள்

மேலும்...
பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார் 0

🕔8.Feb 2016

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு, அமரி விஜேவர்த்தனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த டொக்டர் கிறிஸ் நோனிஸ் 2014 ஆம் ஆண்டு, அவருடை

மேலும்...
சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம் 0

🕔8.Feb 2016

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.டிஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் அந்தக்

மேலும்...
திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை 0

🕔8.Feb 2016

லங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன தெரிவித்தார். லங்காபுத்ர வங்கியில் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தொடர்பில்,  நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...
வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே 0

🕔7.Feb 2016

வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பலிஹகாரவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வட மாகாணசபையின் ஆளுர் பலிஹகார அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்? 0

🕔7.Feb 2016

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதாகலாம் என்று ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. பஸில் மற்றும் நாமல் ஆகியோர் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் 150

மேலும்...
மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம்

மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம் 0

🕔7.Feb 2016

–  எம்.ஐ.எம். அஸ்ஹர் – மாளிகைக்காடு சந்தியினை சுற்றுவட்ட பாதையாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு உட்படுத்துவதாக கூறி தண்டப்பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருதாக  பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த பகுதியை சுற்றுவட்டப் பாதையாக மாற்றியுள்ளதாக பொலிஸார் எதுவித முன்னறிவித்தலையும் வழங்கவில்லை

மேலும்...
மக்களை ஏமாற்றுகிறதா அரசு: பட்ஜட்டில் பறித்ததை, அமைச்சரவையில் கொடுக்கிறது

மக்களை ஏமாற்றுகிறதா அரசு: பட்ஜட்டில் பறித்ததை, அமைச்சரவையில் கொடுக்கிறது 0

🕔7.Feb 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபா பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.கடந்த வரவு – செலுவுத் திட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை எனக் கூறபட்டிருந்த நிலையிலேயே,

மேலும்...
ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார் 0

🕔7.Feb 2016

யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், அங்கு அவரைச் சந்திப்பதற்கு வந்திருந்த காணாமல் போனோரின் உறவினர்களுடன் பேசியதோடு, அவர்களைச் சந்திப்பதற்கு பிறதொரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினையும் கூறினார்.யாழ்ப்பாணம் சென்றுள்ள இளவரசர் ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.முன்னதாக, முதலமைச்சர் அலுவலகத்துக்கு

மேலும்...
யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல 0

🕔7.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இவ் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோ அல்லது வேறு அமைச்சர்களோ எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்வில்லை

மேலும்...
சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு 0

🕔7.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத் திரும்பிபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது.எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆயினும், இந்தச் சம்பவம் தொடர்பாக

மேலும்...
ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம்

ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Feb 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைனின்  இலங்கை வருகைக்கு எதிராக இன்று சனிக்கிழமை பிற்பகல் தும்முல்லையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்துக் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு நகர மண்டபத்திலிருந்து

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் 0

🕔6.Feb 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்  – அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவர் என்றும், அவர் நாகரீகமாகப் பேச வேண்டுமெனவும், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவேளை, பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘கல்வி ராஜாங்க அமைச்சர் மலையகத்தில்

மேலும்...
தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம் 0

🕔6.Feb 2016

தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரியவருகிறது. தாய்வானில் அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் பல குடியிருப்பு மாடிகள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து 230

மேலும்...
கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை 0

🕔6.Feb 2016

அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய வேண்டுதலுக்காகவே, இந்தத் தேங்காய்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தென்னந் தோட்டத்திலிருந்து சுமார் 700 தேங்காய்கள் பறிக்கப்பட்டு, அவை உழவு இயந்திரமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்