தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

🕔 February 7, 2016

Basil+Namal - 01111
மு
ன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதாகலாம் என்று ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

பஸில் மற்றும் நாமல் ஆகியோர் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் 150 மில்லியன் ரூபாவினை பொது நிதியிலிருந்து பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில், ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து யோசிதவுக்கு அடுத்ததாக பஸில் மற்றும் நாமல் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மேற்படி இருவரையும் நிதி குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் கைது செய்வதற்கான அதிகபட்ச சாத்தியங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்