ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

யாழ்ப்பாணம் சென்றுள்ள இளவரசர் ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னதாக, முதலமைச்சர் அலுவலகத்துக்கு ஆணையாளர் வரும்போது, அங்கு அவரைச் சந்திக்கும் பொருட்டு, காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு வந்த ஆணையாளர் தனது வாகனத்திலிருந்து இறங்கி, காணாமல் போனோரின் உறவினர்கள் அருகில் சென்று பேசியதோடு, காணாமல் போனோரின் உறவுகளைச் சந்திப்பதற்காக வேறொரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, முதலமைச்சர் மற்றும் வடமாகாண அமைச்சர்களுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
