கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

🕔 February 6, 2016

Coconut - 987ரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய வேண்டுதலுக்காகவே, இந்தத் தேங்காய்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தென்னந் தோட்டத்திலிருந்து சுமார் 700 தேங்காய்கள் பறிக்கப்பட்டு, அவை உழவு இயந்திரமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த திருட்டு சம்பவத்தில் அரசியல்வாதி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினை கலைக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று 01 லட்சம் தேங்காய்களை உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதும், மேற்படி தேங்காய் திருட்டு தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்