Back to homepage

பிரதான செய்திகள்

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர  எதுவுமில்லை

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர எதுவுமில்லை 0

🕔30.Jan 2016

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல வர்ததகர் ஏ.எஸ்.பி. லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தின் நீர் அகற்றப்பட்டு, அதனுள் மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்ட பின்னர், குறித்த தடாகம் மண்ணால் நிரப்பப்பட்டிருந்ததாக கதையொன்று உலவியது. மேற்படி மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் நேற்றைய

மேலும்...
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔30.Jan 2016

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த

மேலும்...
அடாவடித்தனம் காட்டுகின்ற பிக்குகளின் காவியுடைகள் களையப்பட வேண்டும்; தம்பர அமில தேரர்

அடாவடித்தனம் காட்டுகின்ற பிக்குகளின் காவியுடைகள் களையப்பட வேண்டும்; தம்பர அமில தேரர் 0

🕔29.Jan 2016

காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மற்றும் மற்றும் ஹோமாகம நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து

மேலும்...
தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?

தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்? 0

🕔29.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணல் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பீக்கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதாக கதைகள் உலா வரும் நிலையில் அந்த மாளிகையின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே, அது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் செய்த

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர் 0

🕔29.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே,  அவர் அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்

மேலும்...
வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம் 0

🕔29.Jan 2016

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, விசேட வரப்பிரசாதங்களை

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல் 0

🕔28.Jan 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து

மேலும்...
மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள் 0

🕔28.Jan 2016

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்

மேலும்...
ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு 0

🕔28.Jan 2016

– அஸ்ரப் ஏ. சமத் – கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண முதலமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீா் அஹமட் தலைமை தாங்குகின்றார். இந்  நிகழ்வில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை

திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை 0

🕔28.Jan 2016

– க. கிஷாந்தன் – திருமண நிகழ்வொன்றில் வைத்து, மோதலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; ஹட்டன் நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மஸ்கெலியா மற்றும் வட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த இரு

மேலும்...
துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க 0

🕔28.Jan 2016

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவினை நிராகரித்தமையினைத் தொடர்ந்ந்து கருத்துத் தெரிவித்தபோதே, நீதவான் ரங்க திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.நீதவான் தொடர்ந்து தெரிவிக்கையில்;“துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், நான் வழங்கிய உத்தரவில் மாற்றம்

மேலும்...
அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு 0

🕔28.Jan 2016

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, அவரை எதிர்வரும்

மேலும்...
சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை 0

🕔28.Jan 2016

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தற்போது பரவி வரும் சிகா வைரஸ், வயிற்றிலுள்ள குழந்தைகளைக் கூடத் தாக்கக் கூடியதாகும். இவேளை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். சிகா வைரஸுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகள்

மேலும்...
டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு 0

🕔28.Jan 2016

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்