ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

🕔 January 28, 2016

Hafis naseer - 0123
– அஸ்ரப் ஏ. சமத் –

கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீா் அஹமட் தலைமை தாங்குகின்றார்.

இந்  நிகழ்வில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, அமைச்சரும் மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் விசேட அதிதிகளாப் பங்கேற்றனர்.

முழு நாளும் இடம்பெறும் இம் மாநாட்டில், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமானோர்  பங்கேற்றுள்ளனர்.Hafis naseer - 0126Hafis naseer - 0127Hafis naseer - 0124Hafis naseer - 0125

Comments

புதிது பேஸ்புக் பக்கம்