துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

🕔 January 28, 2016
Judgement - 01துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவினை நிராகரித்தமையினைத் தொடர்ந்ந்து கருத்துத் தெரிவித்தபோதே, நீதவான் ரங்க திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

நீதவான் தொடர்ந்து தெரிவிக்கையில்;

“துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், நான் வழங்கிய உத்தரவில் மாற்றம் செய்ய மாட்டேன். அதனால் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது.

நான் தவறு செய்திருந்தால் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஆனாலும், நான் தவறு செய்யவில்லை. பிணை வழங்குவதற்குப் போதுமான விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்படவில்லை.

அத்துடன் இந்த வழக்கை நான் தொடர்ந்தும் விசாரிக்க விரும்பவில்லை. இது குறித்து சட்டமா அதிபருக்குத் தெரிவித்துள்ளேன். பெரும்பாலும் அடுத்த முறை,  வேறொரு நீதவான்தான் இந்த வழக்கை விசாரிப்பார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்