திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை

🕔 January 28, 2016

Arrest - 97763
– க. கிஷாந்தன் –

திருமண நிகழ்வொன்றில் வைத்து, மோதலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்தது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

ஹட்டன் நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மஸ்கெலியா மற்றும் வட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையில் முடிந்தது.

மேற்படி சம்பவத்தினை அறிந்த ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேரில் சென்று, சந்தேகத்தின் பேரில் 07 பேரை கைது செய்து விசாரணைக்கு உடபடுத்தியதோடு, அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை  காலை ஹட்டன் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்செய்த போது, நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்து, சந்தேக நபர்களை விடுதலை செய்தார்.Arrest - 9776Arrest - 9775

Comments

புதிது பேஸ்புக் பக்கம்