உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

🕔 January 30, 2016

Hakeem - 085லங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே, இம் மாநாட்டின் தொடச்சியாக இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பங்கேற்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்