கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

🕔 January 28, 2016
Gottabaya rajapaksa - 866முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து – தான் விலகுவதாக நீதியரசர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சிக் காலத்தில் பிரியந்த ஜயவர்தனவை உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்