வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

🕔 January 29, 2016
Welikada Prison - 02லகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் சேவை மூப்பின் அடிப்படையிலேயே ஏக்கநாயக்கவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் டி.என். உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஏக்கநாயக்கவின் இடத்துக்கு சிறைச்சாலைகள் அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இடமாற்றம் குறித்து எதுவித கடிதங்களையும் தான் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்று, ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், வெலிக்டை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கிய குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்