மக்களை ஏமாற்றுகிறதா அரசு: பட்ஜட்டில் பறித்ததை, அமைச்சரவையில் கொடுக்கிறது

அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபா பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
கடந்த வரவு – செலுவுத் திட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை எனக் கூறபட்டிருந்த நிலையிலேயே, தற்போது அதை வழங்குவதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இந்த யோசனையினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.
தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ள விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரேனும் இருந்தால், அது தொடர்பில் அறிவிக்க விசேட ஆவணமொன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
எவ்வாறிருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படாது என்று வரவு – செலவுத் திட்டத்தில் ஆட்சியாளர்கள் அறிவித்து விட்டு, தற்போது அமைச்சரவை என்கிற பின்கதவால், குறித்த அனுமதிப் பத்திரங்களை வழங்கத் தீர்மானித்துள்ளமையானது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை போலவே தெரிகிறது.