சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத் திரும்பிபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது.
எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயினும், இந்தச் சம்பவம் தொடர்பாக தாம் அறியவில்லை என்று, சிறைச்சாலைகள் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் கிடைத்தால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், வாக்குமூலங்களை வழங்குவதற்கு இரண்டு அதிகாரிகள் தயாராக இருப்பதாக அறிய முடிகிறது.