வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே
வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பலிஹகாரவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வட மாகாணசபையின் ஆளுர் பலிஹகார அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.