ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம்

🕔 February 6, 2016

Demonstration - Wimal - 098
க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைனின்  இலங்கை வருகைக்கு எதிராக இன்று சனிக்கிழமை பிற்பகல் தும்முல்லையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்துக் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு நகர மண்டபத்திலிருந்து ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணி, தும்முல்லை ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தைச் சென்றடைந்தது.

இதன் காரணமாக, பாதுகாப்பு பெரிதும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Demonstration - Wimal - 095

Comments

புதிது பேஸ்புக் பக்கம்