தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

🕔 February 6, 2016

Taiwan earthquake - 0111தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரியவருகிறது.

தாய்வானில் அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பல குடியிருப்பு மாடிகள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து 230 பேருக்கு மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்வானின் யூஜிங் நகரின் தென்கிழக்கே 36 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மேற்படி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தைவானின் தைனான் நகரில் இடிந்து விழுந்த 17 அடுக்குகளைக் கொண்ட மாடியொன்றிலிருந்து சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். Taiwan earthquake - 0444Taiwan earthquake - 0222Taiwan earthquake - 0333

Comments

புதிது பேஸ்புக் பக்கம்