Back to homepage

மத்திய மாகாணம்

மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 0

🕔4.Mar 2016

– க. கிஷாந்தன் – பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று வியாழக்கிழமை 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது

ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது 0

🕔3.Mar 2016

– க. கிஷாந்தன் – ஒன்பது வயதுடைய சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில், அச் சிறுவனின் தந்தையை தலவாக்கலை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்தனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவன், கழுத்தில் சூடு வைக்கப்பட்ட காயத்துடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சொல் கேளாமல், குழப்பங்கள் செய்ததால்  மகனின் கழுத்தில், நெருப்பில் காய்ச்சிய கரண்டியால் சூடு

மேலும்...
வலது காலுக்குப் பதிலாக  இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம்

வலது காலுக்குப் பதிலாக இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம் 0

🕔3.Mar 2016

சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பிலிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வலது பக்க முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெறும் நோக்கில் கடந்த

மேலும்...
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு 0

🕔2.Mar 2016

– க. கிஷாந்தன் – பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை சரணடைந்தபோது, அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார். அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை கடந்த 2014ஆம் ஆண்டில் இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்

மேலும்...
செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Mar 2016

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிரேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை, கடந்த 2014ஆம் ஆண்டு  ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தார்

மேலும்...
நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த 0

🕔28.Feb 2016

தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நாமல், கோட்டா, பசில், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம என்று எல்லோரையும் கைது

மேலும்...
ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.Feb 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக, 05 கோடி ரூபாவினை கொலையாளிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராய்சி அபேரத்ன நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். மேற்படி பணத்தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக, அவர் மேலும் கூறினார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ரவிராஜ் கொலை தொடர்பான

மேலும்...
நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு 0

🕔26.Feb 2016

நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை சுமார் 04 மணி நேரம் மின்தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் பிரதமர் அறிக்கையொன்றினை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் கடந்த 05 மாதங்களில், இரண்டாவது தடவையாக நாடு முழுவதும்

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்

மேலும்...
நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை 0

🕔24.Feb 2016

பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையினை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழங்கின் சாட்யாளரான எக்னலிகொடவின் மனைவியை,

மேலும்...
யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்படி நபர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  பிரிவுக்கு விசேட சிறை அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விசேட சிறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை முழு நேரமும்

மேலும்...
இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; கண்டி நகரில் பதட்டம்

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; கண்டி நகரில் பதட்டம் 0

🕔19.Feb 2016

கண்டி தலதா மாளிகைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு குழுக்கள் கைகலப்பில் ஈடுபட்டதால், அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள கண்டி – மஹியங்கனை வீதியினை மீளவும் திறக்குமாறு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும், இந்த வீதியினைத் திறக்கக் கூடாது என்று இன்னுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில்

மேலும்...
கண்டி மஹியாவையில், குடிசைகளுக்குப் பதில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கண்டி மஹியாவையில், குடிசைகளுக்குப் பதில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔19.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – கண்டி, மஹியாவை பிரதேச மக்கள் வாழும் குடிசை வீடுகளுக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன், கண்டி நகர கழிவு நீர்

மேலும்...
கூகிள் பலூன் புசல்லாவையில் வீழ்ந்தது

கூகிள் பலூன் புசல்லாவையில் வீழ்ந்தது 0

🕔18.Feb 2016

அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் கூகிள் நிறுவனத்தினால் இலங்கையில் பரீட்சார்த்தமாகச் செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ – களுகல்லவத்தையில் நேற்று புதன்கிழமை இரவு விழுந்துள்ளது. ‘project loon’ என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் நோக்கில், கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பித்தது. இதன்போது பயன்படுத்தப்படும் மூன்று பலூன்களில் ஒன்று, கடந்த திங்கட்கிழமை இலங்கை

மேலும்...
யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார் 0

🕔17.Feb 2016

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்