நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

🕔 February 24, 2016

Gnanasara thero - 01பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையினை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழங்கின் சாட்யாளரான எக்னலிகொடவின் மனைவியை, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர், நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தார் எனும் குற்றச்சாட்டில் ஞானசார தேரர் விளக்க மறியலில் வைக்கப்பட்டு, பிணை வழங்கப்பட்டிருந்தார்.

எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Comments