கூகிள் பலூன் புசல்லாவையில் வீழ்ந்தது

🕔 February 18, 2016

Google baloon - 00987
திவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் கூகிள் நிறுவனத்தினால் இலங்கையில் பரீட்சார்த்தமாகச் செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ – களுகல்லவத்தையில் நேற்று புதன்கிழமை இரவு விழுந்துள்ளது.

‘project loon’ என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் நோக்கில், கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பித்தது.

இதன்போது பயன்படுத்தப்படும் மூன்று பலூன்களில் ஒன்று, கடந்த திங்கட்கிழமை இலங்கை வான்வெளிக்குள் நுழைந்தது.

விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான ஆகாயப் பரப்பில் பயணித்த மேற்படி பலூன், அதனுடன் பொருத்தப்பட்டிருந்த இணையக் கருவிகளுடன் – நேற்றிரவு புசல்லாவ பகுதியில் வீழ்ந்தது.

அசாதாரண காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கள் காரணமாக, இவ்வாறு பலூன் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தெற்காசியாவில், முதன் முதலாக இலங்கையில்தான் இந்தப் பரிசோதனை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரிசோதனை தென் அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக, அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பரிசோதனையில் பயன்படுத்தப்படும் மூன்று பலூன்களில் ஏனைய இரண்டும் அவுஸ்ரேலியா மற்றும் இந்தோனேசிய வான் பரப்புக்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்