யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

🕔 February 17, 2016

Arrest– க. கிஷாந்தன் –

சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன் பொலிஸார், மேற்படி ஐந்து பேரும் பயணித்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த ஐந்து பேரையும் கைது செய்த ஹட்டன் பொலிஸார், சம்மந்தப்பட்ட பிக்குவைஇன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

மற்றைய நான்கு பௌத்த பிக்குகள் குறித்து, அவர்கள் தங்கியிருக்கும் விகாரையின் நாயக்க தேரர்க்கு அறிவித்ததன் பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்