Back to homepage

அம்பாறை

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார் 0

🕔20.May 2019

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது

மேலும்...
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார் 0

🕔20.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக மிக நீண்ட

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம் 0

🕔19.May 2019

– பாறுக் ஷிஹான் – வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை 0

🕔18.May 2019

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...
கல்முனை மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் ராஜிநாமா

கல்முனை மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் ராஜிநாமா 0

🕔17.May 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் இடம் கையளித்துள்ளார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை

மேலும்...
மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது

மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது 0

🕔11.May 2019

அமைச்சர் மனோ கணேசன், புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள் விடயத்தில் மகராஜா ஊடகங்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார் என்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டொக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்துள்ளார். புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியைகளை, ஹபாயா அணிந்து வர வேண்டாம் என்று, அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்

மேலும்...
ஒலிபெருக்கியில் தொழுவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மடத்தனங்களை இனியும் அனுமதிக்க முடியாது

ஒலிபெருக்கியில் தொழுவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மடத்தனங்களை இனியும் அனுமதிக்க முடியாது 0

🕔10.May 2019

– அஹமட் – நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினை அடுத்து பள்ளிவாசல்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது. பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்வதைக் கூட, குறைந்த சத்தத்தில் சொல்லுமாறு ஜம்இய்யத்துல் உலமா கூறியுள்ளதாக அறிய முடிகிறது. இந்தநிலையில், பல

மேலும்...
பயங்கரவாதத்தின் பக்கம் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட வேண்டாம்: சிங்கள, தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

பயங்கரவாதத்தின் பக்கம் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட வேண்டாம்: சிங்கள, தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை 0

🕔9.May 2019

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட குழுவில் 150க்கும் குறைவான தொகையினரே இருந்துள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டு முஸ்லிம்களை அந்த சொற்ப தொகையிடம் தள்ளிவிட வேண்டாம் என்று, சிங்கள மற்றும்  தமிழ் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நேற்று புதன்கிழமை கண்காணிப்பு  விஜயம்

மேலும்...
சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன

சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன 0

🕔7.May 2019

– புதிது செய்தியாளர் அஹமட் – சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் பணப்பரிசு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமையானது அநீதியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் சேனாரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது 0

🕔26.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய இலங்கை முஸ்லிம்கள் சிலர், தமது மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக,

மேலும்...
சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு 0

🕔26.Apr 2019

– அஹமட் – சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும்

மேலும்...
சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு

சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.Apr 2019

சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக மணலை அகற்றும் பணி ஆரம்பம்: பிரதியமைச்சர் மஹ்றூப் பார்வையிட்டார்

ஒலுவில் மீன்பிடி துறைமுக மணலை அகற்றும் பணி ஆரம்பம்: பிரதியமைச்சர் மஹ்றூப் பார்வையிட்டார் 0

🕔20.Apr 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினுள் மீனவர்களின் படகுப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த மணலை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலையை துறைமுகங்கள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்றூப் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் படகுப் போக்குவரத்துக்குத் தடையாக

மேலும்...
பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Apr 2019

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்