சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு
சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.