கல்முனை மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் ராஜிநாமா

🕔 May 17, 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா –

ல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் இடம் கையளித்துள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு மருதமுனை 04ஆம் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இவரை, மேலதிக பட்டியல் மூலம் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உறுப்பினராக நியமித்தர்.

அத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் எந்தவொரு வட்டாரத்திலும் வெற்றி பெறாதபோதிலும் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தை பெற்றிருந்தது.

தற்போது ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் சுழற்சி முறையில் கட்சியின் மற்றொரு வேட்பாளருக்கு இடமளிப்பதற்காகவே சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.ஜி.எம். நதீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் வை.கே. ரஹ்மான் ஆகியோரூம் இதே அடிப்படையில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

41 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகர சபையில் தற்போது மூன்று உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்