ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

🕔 May 20, 2019

ட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது இஸ்மாயில் (இலங்கை வங்கி முன்னாள் முகாமையாளர்), அப்துல் அஸீஸ், அப்துல் பாரி ஆகியோரின் சகோதரருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை செவ்வாய்கிழமை இலக்கம் 19/5 C, சுமனராம வீதி, கல்கிஸ்ஸை எனும் முகவரியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கொழும்பு – குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: எஸ்.ஐ. அமானுல்லா – அட்டாளைச்சேனை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்