ஒலுவில் மீன்பிடி துறைமுக மணலை அகற்றும் பணி ஆரம்பம்: பிரதியமைச்சர் மஹ்றூப் பார்வையிட்டார்
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினுள் மீனவர்களின் படகுப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த மணலை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான ஆரம்ப கட்ட வேலையை துறைமுகங்கள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்றூப் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் படகுப் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணலை அகற்றித்தருமாறு, அங்குள்ள மீனவர்கள் பிரதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக அப்துல்லா மஹ்றூப் பதவியேற்றதன் பின்னர், ஒலுவில் துறைமுகம் தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப் உறுதி