கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை 0
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பு நகரில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி, கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், சுமனரத்ன தேரர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.