தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு

🕔 February 11, 2016
Judgement - 01ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிராக, பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு, இன்று வியாழக்கிழமை கொழும்பு – புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர்.

இதன்போது, எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்போது, இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிங்கள பாடலாசிரியர் இராஜ் இயக்கியுள்ள பாடலானது, இனவாதத்தை தூண்டும் விதமாக அமைந்திருப்பதினால், குறித்த பாடலுக்கு தடை விதிக்குமாறு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதோடு, குறித்த பாடல் அடங்கிய CD யும் மன்றில் ஒப்படைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்