‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா

🕔 January 4, 2016
bodu bala sena - 012‘சிங்க லே’ (சிங்க இரத்தம்) என தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களுடன் தமது அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று, பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆயினும், சிங்க லே (சிங்க இரத்தம்) குறித்து தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகவும், அதுவரை இது பற்றி எவரும் பேசியதில்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே கூறியுள்ளார்.

இந்த விடயம் விஞ்ஞான ரீதியாகவும் வரலாற்று சிறப்புமிக்க விடயங்களின அடிப்படையிலான வாதம் எனவும் 1815 ஆம் ஆண்டு மேல் நாட்டு உடன்படிக்கையில் இலங்கையை ‘சிங்க லே’ என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், நாட்டின் பெயரை ‘சிங்க லே’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நாட்டில் வாழும் ஏனைய இன மக்களையும் ‘சிங்க லே’ என அழைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் இது இனவாதத்தை அடிப்படையாக கொண்டது அல்ல எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்