ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம்

🕔 February 3, 2016

BBS demonstration - 088பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை பௌத்த விவகார அமைச்சுக்கு முன்பாக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகை வரை ஊர்வலமாகச் சென்று, அங்கு மகஜரொன்றினையும் கையளித்தனர்.

நீதிமன்றினை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்ய்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments