Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிரணி"

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது 0

🕔20.Sep 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து,

மேலும்...
அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமை காரணமாக, சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்களை தந்திரோபாயமாக ஒத்தி வைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தம், அரசாங்கத்துக்குத் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு சட்டமூலத்தை

மேலும்...
அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல்

அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல் 0

🕔5.Sep 2017

எதிர்வரும் வாரத்தில் அரசியலில் மாற்றமொன்று நிகழவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளமை காரணமாகவே அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியினர் விரிவானதொரு கூட்டணியினை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 0

🕔28.Aug 2017

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம். மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம்  தாவுவதற்கு தீர்மானம்

ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம் தாவுவதற்கு தீர்மானம் 0

🕔20.Aug 2017

அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஒன்றிணைந்த எதிரணிப் பக்கமாகத் தாவுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்; அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர். இதன்படி, அரசாங்கத் தரப்பிலுள்ள 11 முதல் 14 வரையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குச் செல்லவுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, எதிரணியிலுள்ள சுதந்திரக்

மேலும்...
கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுடைய திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டன எனத் தெரிய வருகிறது. கெஹலியவின் மகன் ரமித் என்பவரின் திருமண நிகழ்வு, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. நட்டாலி செனாலி குணவர்த்தன

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்று, அமைச்சரவை தீர்மானித்தமையின் மூலமாக, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்

மேலும்...
அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த

அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த 0

🕔21.Jul 2017

அரசாங்கத்திலுள்ள மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர், அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் இணையவுள்ளனர் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசியல் அமைப்புச் சபையில் ஓர் அணி இருந்து கொண்டும்,

மேலும்...
மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர்

மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர் 0

🕔14.Jul 2017

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகி, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைகளை கொண்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஐ.தே.கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருடகால ஒப்பந்தம் எதிர்வரும் ஓகட்ஸ் மாதத்துடன் நிறைவடைகின்றமையினையடுத்து, இவர்கள்

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0

🕔7.Jul 2017

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட

மேலும்...
செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி 0

🕔25.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை

கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை 0

🕔13.Jun 2017

– அ. அஹமட் – நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு தொடர்ந்து உத்தரவிடப்பட்டிருந்தும், அவர் வருகை தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காமைக்கு உடல் நலக் குறைவு மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆகிய காரணங்கள்

மேலும்...
அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0

🕔10.Jun 2017

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி

மேலும்...
சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம்

சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம் 0

🕔2.May 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மே தின கூட்டங்களில், மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திலேயே, அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டம்,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம்

மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம் 0

🕔1.May 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட வருகை தந்திருந்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் நிவிதிகல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் என்றும், கண்டியைச் சேர்ந்த 80 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக வெப்பம் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியின் மேதின

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்